You are currently viewing ஷீஆக்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு பகுதி 1

ஷீஆக்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு பகுதி 1

அறிமுகம்‌ :

இஸ்லாத்தின்‌ ஆரம்ப காலங்களில்‌ தோன்றிய நெறிதவறிய இயக்கங்களில்‌ ஷீஆக்கள்‌ பிரதானமானவர்கள்‌.

‘ஷிஆ’ என்ற அரபுப்பதம்‌ அடிப்படையில்‌ பின்பற்றுபவர்கள்‌, உதவியாளாகள்‌ போன்ற கருத்தைக்‌ குறிக்கின்றது. பிரிவு, கூட்டம்‌, உதவியாளர்‌, ஒன்றைப்‌ போன்றது ஆகிய கருத்துக்களில்‌ இச்சொல்‌ அல்குர்‌ஆனில்‌ பயன்படுத்தப்பட்டூள்ளது.

‘ஷீஆக்கள்‌’ என்றால்‌ யார்‌? என்று வரைவிலக்கணப்படுத்துவதில்‌ அறிஞர்களுக்கு மத்தியில்‌ கருத்துவேற்றுமை உள்ளது. அதில்‌ மிக வலுவானதாகப்‌ பின்வரும்‌ கூற்றை எடுக்கலாம்‌ : “ஷீஆ என்பது, ஏனைய கலீபாக்களைவிட அலீ (ரலி) அவர்களை மேம்படுத்தி, நபியவர்களின்‌ குடும்பத்தின்‌ (அஹ்லுல்‌ பைத்தினர்)தான்‌ ஆட்சிக்குத்‌ தகுதியானவாகள்‌ என்பதுடன்‌ ஏனைய ஆட்சிகளெல்லாம்‌ செல்லுபடியற்றவை என்று கருதும்‌ ஒவ்வொருவரும்‌ ஷீஆவே.

தோற்றமும்‌ வளர்ச்சியும்‌ :

ஹிஜ்ரி 36ல்‌ நடைபெற்ற ஸிப்‌ஃபீன்‌ போரைத்‌ தொடர்ந்து ஒரு புறம்‌ கவாரிஜ்கள்‌ அலீ (ரலி) அவாகளுக்கெதிராக வெளிநடப்புச்‌ செய்தபோது, மறுபுறம்‌ அவர்களுக்கு சார்பாக பக்கபலமாக இருந்தவர்களே பிற்காலத்தில்‌ ஷீஆக்களாக அறியப்பட்டனர்‌.

எனவே ஷீஆக்கள்‌ ஹிஜ்ரி 35, 36களில்‌ கூபாவில்‌ தோன்றியுள்ளன.

யமன்‌ நாட்டிலிருந்து இஸ்லாமியப்‌ போர்வையில்‌ மதீனா வந்த அப்துல்லாஹ்‌ பின்‌ ஸபஃ என்ற யூதனே இவ்வியக்கம்‌ தோன்ற பிரதான காரணமாகும்‌. 

உஸ்மான்‌ (ரலி) அவாகளின்‌ படுகொலை தொடக்கம்‌ ஷீஆக்களின்‌ அனைத்து வழிகெட்ட சிந்தனைகளுக்கும்‌ சொந்தக்காரன்‌ இவனென்றால்‌ அது மிகையாது.

ஆரம்பத்தில்‌ அரசியல்‌ நோக்கில்‌ அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவளித்த இவர்கள்‌ அடுத்தகட்டமாக ஏனைய 3 கலீபாக்களைவிட அலீ (ரலி, அவர்களை மேம்படுத்தும்‌ நிலைக்குச்‌ சென்றனர்‌. இதனை அலீ (ரலி) அவர்களே கண்டித்துள்ளார்கள்‌. அதன்பின்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ ஸபஃவின்‌ விசக்கருத்துக்கள்‌ ஷீஆக்களிடையே பரவ ஆரம்பித்தது. ஸஹாபாக்களில்‌ ஒரு சிலரைத்தவிர ஏனையோரைத்‌ தூற்றவும்‌, காபிராக்கவும்‌ ஆரம்பித்து, இறுதிக்கட்டமாக அலீ (ரலி) அவர்களைக்‌ கடவுளாக்கும்‌ நிலைக்கே சென்று இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேறும்‌ நிலைக்குச்‌ சென்றுவிட்டார்கள்‌. இக்கருத்துடைய பலரை அலீ (ரலி) அவர்கள்‌ தண்டனை கொடுத்துக்‌ கொலை செய்தார்கள்‌.


தொடரும்………

Leave a Reply