You are currently viewing ஷீஆக்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு பகுதி 3

ஷீஆக்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு பகுதி 3

ஷீஆக்களின்‌ அடிப்படைக்‌ கொள்கை :

ஷீஆக்களின்‌ அகீதாவைப்‌ பொருத்தவரை பல விதமான விநோதமான நம்பிக்கைகளும்‌ கோட்பாடுகளும்‌ நிரம்பியிருக்கின்றன. அவையனைத்தையும்‌ இங்கு விவரிக்க இடம்கொடுக்கமாட்டாது. எனவே முக்கியமான சில அடிப்படைக்‌ கொள்கைகளை இங்கு சுருக்கமாகக்‌ கூறுகின்றேன்‌.

1. கிலாபத்தும்‌ இமாமத்தும்‌ :

ஷீஆக்களின்‌ பிரதான கோட்பாடே இந்த கிலாபத்துதான்‌. இமாமத்தை அவா்கள்‌ இஸ்லாத்தின்‌ அடிப்படை ருகூன்களில்‌ ஒன்றாகக்‌ கருதுகின்றனர்‌. நபிமார்கள்‌ ரஸுல்மார்களைப்‌ போன்று இமாம்களையும்‌ அல்லாஹ்வே தெரிவு செய்கின்றான்‌. அவா்களுக்கு அல்லாஹ்வுடன்‌ நேரடித்‌ தொடர்புள்ளது. அவர்களை நம்புவது ஈமானின்‌ ஒரு பகுதி போன்ற கருத்துக்களைக்‌ கொண்டுள்ளதுடன்‌, அல்குர்‌ஆனின்‌ பல வசனங்களை இவர்களது இமாம்களுக்கு சார்பாக வளைத்துள்ளனர்‌.

2. இமாம்கள்‌ தவறைவிட்டும்‌ பாதுகாக்கப்பட்டவர்கள்‌ :

சிறிய பாவங்களோ, பெரிய பாவங்களோ, தவறுதலாகவோ, மறதியாகவோ பிறந்ததிலிருந்து மரணிக்கும்வரை அவா்களுடைய இமாம்கள்‌ செய்ய மாட்டார்கள்‌. அதனை விட்டும்‌ அவர்கள்‌ பாதுகாக்கப்பட்டவர்கள்‌ என்பது ஷீ்‌ஆக்களுடைய அடிப்படைக்‌ கொள்கை. அவர்களுடைய இமாம்கள்‌ நபிமார்களைவிடச்‌ சிறந்தவர்கள்‌, மறைவான அறிவு பெற்றவர்கள்‌ போன்ற கருத்துக்களையும்‌ இமாம்கள்‌ விஷயத்தில்‌ நம்புகின்றனர்‌.

3. நடிப்பு (தகிய்யா) :

இது ஷீஆக்கள்‌ தமது தீய கருத்துக்களை சமூகத்தில்‌ வெளிவராமல்‌ முன்னெச்சரிக்கையாக மறைத்துக்‌ கொள்வதைக்‌ குறிக்கின்றது. பெரும்பான்மை ஷீஆக்கள்‌ தம்மை ஷீஆவெனக்‌ காட்டிக்கொள்ள மாட்டார்கள்‌.

4. எதிர்பார்க்கப்படும்‌ மஹ்தீ :

அஹ்லுஸ்ஸுன்னாவினர்‌ ஸஹீஹான நபிமொழிகளில்‌ இடம்பெற்றுள்ள மஹ்தீ (அலை) அவா்கள்‌ பற்றிய செய்திகளை ஏற்றுக்‌ கொள்கின்றனர்‌. ஆனால்‌ ஷஆக்கள்‌ கூறும்‌ மஹ்தி இவரல்ல. அவர்களுடைய 12வது இமாமாகிய முஹம்மத்‌ பின்‌ ஹஸன்‌ அல்‌அஸ்கரீ என்பவரே ஷீஆக்கள்‌ எதாா்பார்க்கும்‌ மஹ்தி. 

அவர்களின்‌ நம்பிக்கைப்‌ பிரகாரம்‌ இவர்‌ ஹி.260களில்‌ மறைந்து ஒளித்துக்‌ கொண்டிருக்கின்றார்‌. மீண்டும் திரும்பி வந்து நீதியை நிலைநாட்டுவாரென்பது இவர்களின்‌ நம்பிக்கை.

5. அல்குர்‌ஆன்‌ பற்றிய ஷீஆக்களின்‌ நிலைப்பாடு :

தற்போதுள்ள அல்குர்‌ஆன்‌ முழுமையற்றது, திரிபுகளும்‌ குறைபாடுகளுமுள்ளது, அலீ (ரலி) மற்றும்‌ அஹ்லுல்‌ பைத்தினர்‌ பற்றி அருளப்பட்ட வசனங்கள்‌ மழுங்கடிக்கப்பட்டுள்ளன. தற்போதிருக்கும்‌ அல்குர்‌ஆனின்‌ மூன்று மடங்கு பெரியதுதான்‌ உண்மையான அல்குர்‌ஆன்‌. அதன்‌ பெயர்‌ ‘முஸ்ஹபு பாத்திமா’ என்பதாகும்‌. அதன்‌ மூலப்பிரதி தாம்‌ எதிர்பாரத்திருக்கும்‌ மஹ்தீயிடம்தானுள்ளது என்பதுதான்‌ ஷீஆக்களின்‌ அல்குர்‌ஆன்‌ பற்றிய நம்பிக்கை. அத்துடன்‌ தற்போதுள்ள அல்குர்‌ஆனின்‌ பல வசனங்களைத்‌ தமக்கு சார்பாக மாற்றிக்‌ கொண்டுள்ளதுடன்‌, மேலதிகமாக பல வசனங்களையும்‌ அத்தியாயங்களையும்‌ அதிகரித்துள்ளனர்‌. அதில்‌ முக்கியமானதுதான்‌ “ஸுரதுல்‌ விலாயா” என்பது.

6. ஸஹாபாக்கள்‌ பற்றிய நிலைப்பாடு :

ஸஹாபாக்கள்‌ விடயத்தில்‌ ஷீஆக்கள்‌ வரம்பு மீறியே நடந்து கொள்கின்றனர்‌. சுவனத்தைக்‌ கொண்டு நற்செய்தி கூறப்பட்ட முப்பெரும்‌ கலீபாக்கள்‌ உட்பட பெரும்பான்மையான ஸஹாபாக்கள்‌ இவர்களின்‌ பார்வையில்‌ மதம்மாறியவா்கள்‌. நபியவர்களின்‌ அன்பு மனைவி முஃமின்களின்‌ அன்னையான ஆஇஷா (ரலி) அவர்களுக்கும்‌ படுதாறு கூறித்திரிகின்றனர்‌. அபூபக்ர்‌ (ரலி) உமர்‌ (ரலி) ஆகிய இருவரையும்‌ குரைஷிகளின்‌ இரு சிலைகள்‌ என்கின்றனர்‌.

7. விதியில்‌ நெறிபிறழ்ந்த ஷீஆக்கள்‌ :

ஒரு செயல்‌ நடக்கும்‌ வரை அதுபற்றி அல்லாஹ்வுக்குத்‌ தெரியாது என்பது ஷீஆக்களின்‌ மற்றுமொரு கொள்கை. இதனை அரபியில்‌ “அல்‌ பதா” என்பர்‌.

இப்பிரபஞ்சத்தைப்‌ படைப்பதற்கு முன்னரே அல்லாஹ்‌ மறுமை வரை நடக்கவிருக்கின்ற அனைத்தையும்‌ அறிவான்‌ என்பதே அல்குர்‌ஆன்‌, ஹதீஸ்‌ அடிப்படையில்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நம்பிக்கை. இதில்‌ ஷீஆக்கள்‌ மாறுபடுகின்றன.

Leave a Reply