ஷீஆக்களின் பெயர்கள் :
1. ஷீஆ : இப்பெயர் கொண்டே அவா்கள் பிரபலமடைந்துள்ளனர். இதில் அவர்களுடைய அனைத்துப் பிரிவும் உள்ளடங்கும்.
2. ஸைதிய்யா : ஹுஸைன் (ரலி) அவர்களின் பேரப்பிள்ளையான ஸைத் பின் அலீயைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இப்பெயர் வந்தது.
3. ராபிழா : மேற்கண்ட ஸைத் பின் அலீ ‘கலீபாக்களைத் திட்ட வேண்டாம்’ என்று விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் ராபிழா என்ற பெயர் உருவானது.
ஷீஆக்களின் பிரிவுகள் :
ஷீஆக்கள் பல பிரிவினா்களாகப் பிரிந்துள்ளனார். சில அறிஞாகள் இவர்கள் 70 பிரிவினராக உள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அப்பிரிவுகளை ஆய்வு செய்து பார்க்கும் போது அனைத்துப் பிரிவுகளும் ஒரே தரத்திலில்லையென்பது புலனாகின்றது. அதிக தாக்கம் செலுத்தும் பிரதான 3 பிரிவுகளை இங்கு சற்று அலசுவோம்.
1. அஸ்ஸபஇய்யா :
அப்துல்லாஹ் பின் ஸபஃ என்ற யூதனைப் பின்துயர்ந்தவர்களே ஸபஇய்யாக்கள் எனப்படுகின்றனர். அஹ்லுல் பைத்தினர் மீது கொண்ட போலியான நேசத்தை தனது விசக்கருத்துக்களை விதைக்க ஆயுதமாகப் பயன்படுத்தினான். ஹிஜாஸ் மாகாணம் (மக்கா, மதீனா, ஜித்தா, தாஇப்) மற்றும் பஸரா, கூபா, ஸிரியா, எகிப்து போன்ற பகுதிகளில் உஸ்மான் (ரலி) அவா்களுக்கெதிரான கருத்துக்களை பரத்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தி அவர்கள் அறியாயமாகக் கொலை செய்யப்படக் காரணமாயிருந்தான்.
அலீ (ரலி) அவர்கள்தான் ஆட்சிக்கென நபியவர்களால் வஸிய்யத் செய்யப்பட்டவரென்றும், அவர்கள் மறுபிறவியெடுத்து வருவார்களென்றும், அவர்களிடம்
கடவுள்த்தன்மை இருப்பதாகவும், அவர்கள் கொலை செய்யப்படவில்லை, மாறாக வானிற்கு ஏறியுள்ளார்களென்றும் வாதாடிக் கொண்டிருந்தான். இந்த ஸபஇய்யாக்களின் கருத்துக்களுக்கும் அஹ்லுல்பைத்தினருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைச் செவியுற்ற அலீ (ரலி) அவர்கள்கூட அக்கூட்டத்தினருக்குத் தண்டனை வழங்கினார்கள்.
2. ஸைதிய்யாக்கள் :
ஹுஸைன் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஸைனுல் ஆப்தீன் அலீ பின் ஹுஸைன். அவர்களுடைய காலத்தில் ஷீஆக்கள் அஹ்லுல்பைத் விடயத்தில் அளவுகடந்து செல்ல ஆரம்பித்தனர். இவர்கள் அதனைக் கண்டிக்கும் போக்கைக் கொண்டிருந்தனர். இந்த அலீ பின் ஹுஸைனுக்குப் பல குழந்தைகள் உள்ளனர்.
அவர்களில் ஸைத், முஹம்மத், உமர் போன்றவர்கள் பிரபலமானவர்கள். ஸைனுல் ஆப்தீனுக்குப் பின் இமாமத்திற்குத் தகுதியாகனவர் யார்? ஸைத்தா ? அல்லது முஹம்மதா? என்பதில் ஷீஆக்கள் மத்தியில் பிரச்சினை உருவானது. ஒரு பிரிவினர் ஸைத் பின் அலீதான் தகுதியானவர் என்று ஒரு கூட்டாத்தார் வாதாடினர். அவாகள்தான் ஸைதிய்யாக்கள்.
யமன் நாட்டிலே இவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
இப்பிரிவின் ஆரம்பத்தவா்கள் ஸஹாபாக்களைத் தூற்றாமல் நடுநிலை வகித்தார்கள். அதனால் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு மிக நெருக்கமான ஷ்ஆப் பிரிவு இந்த ஸைதிய்யாக்கள் என்று சில அறிஞாகள் எழுதி வைத்திருந்தனர். ஆனால் தற்காலத்திலுள்ள ஸைதிய்யாக்கள் நிலைமாறி ராபிழாக்களுடைய கொள்கையையே ஸஹாபாக்கள் விடயத்தில் கடைபிடிக்கின்றனர்.
3. ராபிழாக்கள் :
‘ரஃப்ழ்’ என்ற அரபு மூலச்சொல்லிலிருந்தே ராபிழா’ என்ற பெயர் உருவானது.
ரஃப்ழ் என்றால் ஒன்றை விட்டுவிடுதல், புறக்கணித்தல் என்பதாகும். “அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) உட்பட பெரும்பான்மையான ஸஹாபாக்களை மறுத்து, கிலாபத் நபியவ்களுடைய வஸிய்யத் பிரகாரம் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் வம்சத்தினருக்கும்தான் அமைய வேண்டும், ஏனையோருடைய கிலாபத் செல்லுபடியற்றது” என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களே ராபிழாக்கள் எனப்படுகின்றனர்.
இஸ்னாஅஷரிய்யாக்கள் :
ராபிழாக்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து சென்றனர். அவர்களில் பிரதானமானவர்களும், தற்காலத்தில் பெரும்பான்மை ஷீஆக்களாகவும் இருப்பவர்கள் 12 இமாம்களை முதன்மைப்படுத்தும் இஸ்னாஅஷரிய்யாக்களாகும். ஈரான், இராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் ஷீஆக்கள் இப்பிரிவினரே. இந்தியா இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் நாடுகளில்கூட இவர்களுடைய ஊடுருவல் உள்ளது. அவர்கள் முதன்மைப்படுத்தும் அந்த 12 இமாம்களும் பின்வருமாறு :
1. அலீ பின் அபீதாலிப் (ரலி).
2. ஹஸன் பின் அலீ (ரலி).
3. ஹுஸைன் பின் அலீ (ரலி).
4. அலீ பின் ஹுஸைன் பின் அலீ.
5. முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் அல்பாகிர்.
6. ஜஃபர் பின் முஹம்மத் பின் ஹுஸைன் அஸ்ஸாதிக். 7. மூஸா பின் ஜஃபர் அல்காழிம்.
8. அலீ பின் மூஸா அர்ரிழா.
9. முஹம்மத் பின் அலீ அல்ஜவாத்.
10. அலீ பின் முஹம்மத் அல்ஹாதீ.
11. ஹஸன் பின் அலீ அல்அஸ்கரீ.
12. முஹம்மத் பின் ஹஸன் அல்அஸ்கரீ. (இவர்தான் மறைந்து வாழும் எதிர்பார்க்கப் படக்கூடிய அவர்களின் மஹ்தி). இந்த இஸ்னாஅஷரிய்யாக்களுக்கு ஜஃபரிய்யா, இமாமிய்யா, ராபிழா போன்ற வேறு பெயர்களும் உள்ளன.