AS-Sheihk-SHM.ISMAIL (SALAFI)
கட்டுரைகள்

ஷீயாக்கள் உஷார்
அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீயாயிஷமாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.

நபித்தோழர்களை குறைகாணும் வழிகேடர்கள்
வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித்தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷிஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இதுகுறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக
இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஷியாக்களை ஆதரிப்பவர்கள் இதையும் ஆதரிப்பார்களா?
அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷியாயிஷமாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.
நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷியாக்கள் தமது தவறான சிந்தனைகளையெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர்.

உஸ்மான் (ரழி) கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்
துல்ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(வ) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடு களையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது.
ஆனால், உஸ்மான்(வ) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (வ) அவர்கள் தனது பதவியையும் உயிரையும் காப்பதற்காக தனது மக்களில் ஒருவரினதும் ஒரு துளி இரத்தம் கூட சிந்தப்படக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்