-எகிப்திலிருந்து அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) (BA.Hons)
இலங்கையில் ஷீஆக்கள் பற்றிய எச்சரிக்கையை உலமாக்கள் முன்வைத்து வந்த நேரம் வழிகெட்ட ஷீஆக்களுக்கு ஆதரவு கொடுக்கும் தனிக்குரலாக செயல்பட்ட பெருமை இக்வானுல் முஸ்லிமீன் மற்றும் ஜமாஅதே இஸ்லாமியை சேரும் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம்.
ஷீஆக்கள் நூல்களுக்கு அணிந்துரையாகவோ அல்லது ஷீஆக்கள் போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவு குரலாகவோ பல பரிணாம வடிவங்களில் இக்வானிய ஜமாஅதே இஸ்லாமிய ஆதரவு குரல் ஓங்கி ஒலித்ததை கண்டு வந்தோம்.
ஷிஆக்கள் பற்றிய இவர்களின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்ன என்பதை காணவேண்டும் என்றால் சில வரலாற்று குறிப்புகளை அகழ்வுக்கு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள இந்த இக்வான் ஜமாத்தே இஸ்லாமிய தாவா அமைப்பு சுயமான சுயாதீனமான சிந்தனை பிரிவினர் அல்ல, இவர்களின் ஆன்மீக அரசியல் போக்குக்கு உந்துதலாக இருக்கும் சிந்தனைகள் பாகிஸ்தான் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே இருக்கும். அந்த சிந்தனைகள் சரியா பிழையா என்ற ஆய்வுக்கு அப்பால்பட்ட வெறித்தனமான தக்லீத் தாராள சிந்தனையுடன் அவை உள்வாங்கப்பட்டு வந்தன.
இவர்கள் புகழுக்குரிய அறிஞர்களான யூசுபுல் கர்ளாவி,மவ்தூதி,முஹம்மத் அல் கஸ்ஸாலி,செய்யித் குதுப் போன்றவர்கள் ஷீஆக்கள் பற்றி என்ன நிலைப்பாட்டில் இருந்தனரோ அந்த நிலைபாட்டுக்கு அச்சு பிசகாத நிலைபாட்டையே இலங்கையில் இக்வான் ஜமாத்தே இஸ்லாமியினர் எடுத்து வந்தனர்.
ஷீஆக்கள் பற்றிய உண்மை நிலைமையை ஓரளவு புரிந்த யூசுபுல் கர்ளாவியின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு போக முன் இவர்கள் பல வருடங்களாக ஷீஆக்களை எப்படி எல்லாம் நம்பி வந்தனர் என்பதை பற்றிய சில குறிப்புகளை இங்கு பதிவது சிறந்ததாகும்.
ஷீஆக்கள் பற்றி மௌதூதி கூறியது:
“கொமைனியின் புரட்சி இஸ்லாமிய புரட்சியாகும்.அதை சாதித்தவர்கள் இஸ்லாமிய ஜமாத்தும் இஸ்லாமிய இயக்கங்களில் பயிற்றுவிக்கபட்ட இளைஞர்களுமாகும். அனைத்து முஸ்லிம்களும் குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்கள் இந்த புரட்சிக்கு ஆதரவு கொடுப்பதும் அனைத்து துறைகளிலும் உதவியாக இருப்பதும் கட்டாயமாகும்.
ஆதாரம்: மௌதூதியின் ஷகீகான் நூல்: பக்கம் 3
ஷீஆக்கள் பற்றி முஹம்மத் கஸ்ஸாலி கூறியது:
ஷீஆக்களிடம் எம்மிடம் இல்லாத கூட்டப்பட்ட குறைக்கப்பட குர்ஆன் உள்ளதாக சிலர் சொல்கின்றனர் நான் கேட்டேன் எங்கே அந்த குர்ஆன் ?
நபி ஸல் அவர்கள் அனுப்பட்ட பின் மூன்று கண்டங்கள் இஸ்லாம் பரவியுள்ளது பதினான்கு நூற்றாண்டு கடந்தும் விட்டது, ஆனால் இஸ்லாமிய உலகு குறித்த ஆயதுக்களையும் சூராக்களையும் வரையறுக்கப்பட்ட ஆரம்பத்தையும் முடிவையும் சொற்றொடர்களையும் கொண்ட ஒரே ஒரு குர்ஆனை தவிர வேறு குர்ஆனை அறியவில்லை. எங்கே இவர்கள் சொல்லும் மற்ற குர்ஆன்?
எதற்காக ஜின்களோ மனிதர்களோ நீண்டகாலம் ஆகியும் அந்த குர்ஆனை கண்டுபிடிக்கவில்லை?
about:blank
எதற்காக (எமது ஷீஆவின் மீது )இந்த இட்டுக்கட்டு ?
“திபாஅன் அன் அகீதா வ ஷரீஆ ” என்ற நூலில் முஹம்மத் கஸ்ஸாலி இதை கூறியுள்ளார்.
இக்வான் முஸ்லிம்களின் தலைவர்(முர்ஷித்) கூறுவது”
இக்வான் முஸ்லிம்களின் முன்னாள் தலைவர் மஹ்தி ஆகிப் அவர்கள் ஷீஆக்கள் விடயத்தில் சவுதி உலமாக்கள் நிலைபாட்டை எதிர்த்து ஹிஸ்புல்லா என்ற ஷீஆ அமைப்புக்கு ஆதரவாக 2006 ஆம் ஆண்டு விமர்சனம் செய்திருந்தார். ஷீஆ சுன்னா என்ற பாகுபாடு இன்று போராட்ட இயக்கங்களுக்கு உதவி செய்வதை சில ஆட்சியாளர்கள் தடுப்பதாக அவர் கூறி இருந்தார்.
லெபனானை சேர்ந்த இக்வானிய அறிஞர் பைசல் மௌலவி கூறியது:
ஷீஆக்கள் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் மத்கப் ஐந்தாவது மத்கப் என்று சொல்லப்படும் அளவு உள்ள மத்கப் ஆகும். ஹிஸ்புல்லா என்ற அமைப்பு விடுதலை போராட்ட அமைப்பாகும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சொல்லும் சவுதிய அறிஞர் ஜபரைன் அவர்களின் பத்வா கவளைக்கிடமானது.
மேலே நாம் பதிந்தவை ஷீஆக்கள் பற்றியும் ஹிஸ்புல்லா என்ற ஷைத்தானிய கூட்டம் பற்றியும் அன்று இக்வான்கள் கூறிவந்த நிலைபாடாகும்.
யூசுபுல் கர்ளாவியின் பழைய நிலைப்பாடு:
“ஷீஆக்களை நான் காபிர்கள் என்று சொல்லமாட்டேன். சன்னி முஸ்லிம்களின் மத்கபில் உள்ளவர்கள் தமக்கு இடையில் எவ்வாறு கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்களோ அதைவிட பெரிய வேறுபாடு ஒன்றும் ஷீஆக்களுக்கும், சன்னி முஸ்லிம்களுக்கும் இல்லை. ஷீஆக்களை காபிர்கள் என்று சொல்லும் கடும்போக்களர்கள் போல நான் இல்லை.”
ஷீஆக்கள் பற்றிய கர்ளாவியின் புதிய நிலைப்பாடு
தென் லெபனானில் இஸ்ரேலை எதிர்த்து போராடிய காரணத்தால் ஷீஆ பிரிவை சேர்ந்த ஹிஸ்புல்லா என்ற இயக்கம் விடுதலை போராட்ட இயக்கம் என்றும் அதன் தலைவன் ஹஸன் நஸ்ருல்லா தலைமை போராளிகள் முஜாஹித்கள் என்றும் கூறிவந்த கர்ளாவி சிரியா யுத்தத்தில் ஹிஸ்புல்லாவின் தலையீட்டின் காரணமாக அந்த அந்த இயக்கம் குறித்து தனது நிலைபாட்டை வாபஸ் வாங்கியுள்ளார்.
சிரியாவில் பஷாருள் அஸதுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள ஹிஸ்புல்லா இயக்கம் ஷைத்தானிய இயக்கம் என்றும் அதன் தலைவன் ஹசன் நஸ்ருல்லா ஷைத்தானிய தாகூத்திய உதவியாளன் என்றும் கூறியுள்ளார்.
சவூதி அரேபியா அறிஞர்கள் பற்றிய கர்ளாவியின் புதிய நிலைப்பாடு
இஸ்லாமிய உம்மத்துக்கு சவுதிய அரசின் உதவி மெச்சத்தக்கது என்று இக்வானிய கர்ளாவி பாராட்டியுள்ளார்.
உலமாக்களை சவூதி அரசு மதித்து நடக்கின்றது.சத்தியதிட்கு போராடவும் அநியாத்துக்கு எதிராக நிற்பதிலும் சவூதி அரசு உதவி வருகிறது.
பூமியின் கிழக்கிலும் மேற்கிலும் இஸ்லாமிய உம்மத்துக்கு எல்லையற்ற உதவி செய்யும நாடாக சவூதி திகழ்கிறது என்றும கர்ளாவி கூறியுள்ளார்.
அத்தோடு சவூதி அறிஞர்கள் தன்னை விட முதிர்ச்சி அடைந்தவர்கள் என்றும் தான் ஷீஆக்கள் விடயத்தில் சவூதி அறிஞர்களை விமர்சித்தது தவறு என்றும் தனது இணைய தளத்திலேயே எழுதியுள்ளார்.
http://www.qaradawi.net/component/content/article/6685.html
ஷீஆக்கள் இணைவைப்பாளர்களா? முஸ்லிம்களா? என்ற நிலைப்பாட்டில் கர்ளாவியின் புதிய நிலைப்பாடு.
இந்த விடயத்தில் கர்ளாவியின் பழைய நிலைப்பாடு:
“ஷீஆக்கள் பற்றி சில கடும்போக்காளர்கள் சொல்வதுபோன்று நான் அவர்களை காபிர்கள் என்று சொல்லமாட்டேன். எமக்கும் ஷீஆக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு இஸ்லாமிய அடிப்படையில் அல்ல சில இபாதத் கோட்பாடான கிளை விடயங்களியே.
ஷீஆக்களை நான் முஸ்லிம்களாகவே கருதுகிறேன் என்றாலும் அவர்கள் அவர்கள் பித்அத் வாதிகள் ஆவர்.”
இந்த விடயத்தில் கர்ளாவியின் புதிய நிலைப்பாடு:
எகிப்தில் 13-06-2013 அன்று நடந்த சிரியா யுத்தம் பற்றிய மாநாட்டில் கலந்துகொண்ட யூசுபுல் கர்ளாவி அவர்கள் கூறியதாவது.
“சிரியாவில் (அஹ்லு சுன்னா) முஸ்லிம்களுக்கு எதிராக போராடுகின்றவர்கள் முஷ்ரிக்குகள் ஆகும். அவர்களுக்கு என்று அல் குர்ஆன் இல்லை. அவர்கள் தொழுவதில்லை நோன்பு நோட்பதிலை இஸ்லாத்தில் இருந்து எந்த ஒன்றும் அவர்களுக்கு இல்லை, இவர்களுக்கு பணத்தாலும் ராணுவத்தாலும் ஆயுதத்தாலும் உதவி செய்யும் நாடு ஈரான் ஆகும்.
சிரியாவின் அதிபர் பஷாருள் அசாத் ஒரு மதச்சார்பற்ற ஒருவர் ஆவார். அவருக்கு அல் குர்ஆனுடனோ சுன்னாவுடனோ ஷரீஆ வுடனோ எந்த தொடர்பும் இல்லாதவர். முஸ்லிம்களுடன் போராடும் இந்த கூட்டம் யா அல்லாஹ் என்பதற்கு பதிலாக யா ஹுசைன் என்று கூறுகின்றனர், இது அவர்களின் தெளிவான இணைவைப்பை எடுத்து காட்டுகிறது.
எனவே சிரியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக போராடுகின்றவர்களுடன் அல்லாஹ்வின் கலிமா உயர்ந்து நிற்க நாம் போராடுவது கடமையாகும்.”
ஷீஆக்களிடம் ஏமாந்த இக்வானிய வழிகெட்ட கூட்டம்
ஷீஆக்களிடம் உள்ள குர்ஆன் ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்று அல்ல அதற்கு மாற்றமாகவே ஓதி வருகின்றனர் அதையே அவர்கள் நூல்களில் சொல்லியும் உள்ளனர்.”முஸ்ஹப் பாதிமா” என்ற ஒன்று அவர்களிடம் உண்டு. மூன்று சஹாபிகளை தவிர அபூபக்கர், உமர், உத்மான் ஆயிஷா (ரலி) போன்ற அணைத்து சஹாபாக்களும் காபிர்கள் என்ற கொள்கை உள்ள ஷீஆக்கள் பற்றியும் அவர்களின் வழிகெட்ட குப்ரிய கொள்கை பற்றியும் அஹ்லு சுன்னா உலமாக்கள் எழுதி வந்தனர்.
ஷீஆக்களின் துரோக வலையில் அறிவாளி சிக்க மாட்டான் அறிவிளிதான் சிக்கிகொல்வான். மார்க்க அறிவில்லாத ஏமாளி கோமாளிதான் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றப்படுவான்.
கீழே நான் தரும் கிளிப்பை பார்வை இடுகின்றவர்கள் அதில் இக்வான்கள் அறிஞர் முஹம்மத் கஸ்ஸாலி எதை மறுத்தாரோ அந்த விடயத்தை அவர்கள் ஆதரிக்கும் ஷீஆ தலைவன் வழிகெட்ட ஹஸன் நஸ்ருல்லா அல் குர்ஆனை எவ்வாறு திரிவுபடுத்தி ஓதுகிறான் என்பதையும் அவன் அதற்கு ஆதரமாக எடுத்த வழிகெட்ட கொமைனியின் நூலில் கூறப்பட்ட வாசகத்தையும் பார்க்கவும்.
Advertisements
about:blank
Report this ad
http://www.youtube.com/watch?v=ETcQj15k41s
இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதாக இந்த ஷீஆக்கள் கூச்சல் இட்டவை அனைத்தும் வெறும் நாடகம் என்பது அம்பலமாகியது. இஸ்ரேலை உண்மையில் எதிர்த்து காட்டிய ஒரே ஜனாதிபதி சதாம் ஹுசைன் ஆவார், அவரே தான் சொன்னபடி இஸ்ரேலுக்கு தாக்குதலை மேற்கொண்டார்.
ஹிஸ்புல்லா போன்ற வழிகெட்ட போராளிகள் இஸ்ரேலை தாக்குவதாக நாடகமே நடத்தி வந்தனர். இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் சன்னி நாடான லெபனானை நாசப்படுத்தவே இவர்கள் இஸ்ரேலுக்கு மறைந்திருந்து சில நாடக தாக்குதல் நடத்திவிட்டு ஒழிந்துவிடுவர்.அதன் விளைவு இஸ்ரேலின் எதிர் தாக்குதலில் லெபனானின் பொதுஸ்தளங்களும் பொதுமக்களும் தாக்கி தகர்க்கபடுவதுவே கண்டுவந்த உண்மையாகும்.
புதிய நிலைபாடு இலங்கையில் எதொரோலிக்குமா?
இந்த ஷீஆக்க்கள் கூட்டத்தின் வெறும் அறிக்கைகளையும் பொய்யான போராட்டத்தையும் நுனிப்புல் மேய்ந்து ஆய்வு செய்து அவர்கள் போராளிகள் என்று ஏமாந்து வந்த இக்வான் அறிஞர்களில் யூசுபுல் கர்ளாவி பிரபல்யமானவர்.
இவரின் ஷீஆ சார்பு நிலை அவர்கள் பற்றிய அசமந்தபோக்கு பத்வாக்களை இலங்கையில் இறக்குமதி செய்து “ஈரானாவது எம்மை காப்பற்றுமா?” “ஷீஆக்கள் இணைவைப்பாளர்கள் அல்ல” போன்ற விடயங்கள் அடங்கிய கட்டுரைகளை ஆய்வுகள் இன்றி இலங்கையில் பரப்பிய மோசமான பெருமை ஜமாத்தே இஸ்லாமியையும் இக்வான்களையுமே சேரும் என்பதை அவர்கள் சஞ்சிகைகள் அவர்கள் தாவாவை தாங்கிவரும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடியும்.
ஷீஆக்கள் பற்றிய கர்லாவியின் பழைய நிலைபாட்டை இலங்கையில் எதிரொலிக்க செய்து ஊடக அனுசரணை வழங்கிய இலங்கை ஜமாத்தே இஸ்லாமி டீ.ஏ போன்ற இயக்கங்கள் கர்ளாவியின் புதிய நிலைப்பாட்டை இலங்கையில் எதிரொலிக்க செய்வார்களா? என்ற கேள்வி இயல்பானதே.
நாம் அவர்கள் மீடியாக்களில் வாசித்தவரை இதுவரை கர்ளாவியின் செய்திகளை இலங்கையில் அவர்கள் பரப்ப எடுத்த பிரயத்தனத்தை கர்ளாவியின் புதிய நிலைபாட்டை பரப்புவதில் எடுக்கவில்லை என்பதை காண முடிகிறது.
இவர்கள் ஏலவே எகிப்தில் இக்வானிய ஆட்சி பற்றிய பொய்யான தகவல்களையும் பக்க சார்பான தகவல்களையும் வாரி வழங்கி வந்தவற்றை நான் பல இடங்களில் சுட்டி காட்டி வந்துளேன் என்பதும் குறிப்பிடதக்கது.
இவர்கள் அல் குர்ஆன் சுன்னாவின் பாதையில் மட்டும் தமது ஆன்மீக அரசியல் விடயங்களை மைத்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்திப்போம்.