– M.S.M. இம்தியாஸ் ஸலபி
காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம்.
நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் ஒன்றே என்பதிலும் முரண்பாடுகளில்லை. சஹாபாக்கள் சுவனவாசிகள் என்பதிலும் சந்தேகங்கள் இல்லை. ஆனால் ராபிளா ஷீஆவை பொருத்தவரை இக்கோட்பாடுகளை மொத்தமாகவே நிராகரிக்கின்றனர். இஸ்லாம் என்ற பெயரில் ஷீஆ என்ற மதப் பிரிவை உண்டு பண்ணி அந்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் ராபிளிகளான ஷீஆ அல்லாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.
இப்புனித மார்க்கத்தை கட்டிகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் மண்ணில் நிலைநாட்டுவதற்கும் தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் தங்களது பொருளாதாரத்தையும் அர்ப்பணித்தவர்கள் தான் சஹாபாக்கள். அல்லாஹ்வையும் அவனது இறுதித்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்ட ஒரே காரணத்திற்காக காபிர்களின் நிந்தனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி உயிர்களை இழந்தவர்கள் உடமைகளை துறந்தவர்கள். உடுத்த ஆடைகளுடன் மேடுபள்ளங்களை கடந்து இரவு பகலாக பயணித்து அகதிகளாக அநாதைகளாக மதீனாவில் தஞ்சம் புகுந்து தூய மார்க்கத்தை வளர்த்தவர்கள் சஹாபாக்கள்.
இந்த உத்தமர்களின் செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்கள்தான் உண்மையான முஃமின்கள் வெற்றியாளர்கள் சுவனத்தின் வாரிசுகள் என்று போற்றி புகழ்கிறான். தியாகத்தின் செம்மல்களான இந்த சஹாபாக்களை முனாபிக்குகள் நயவஞ்சகர்கள் அனியாயக்காரர்கள் முர்தத்கள் என்று இந்த ராபிளா ஷீஆக்கள் தூற்றுகிறார்கள் சபிக்கிறார்கள். “ராபிளாகள்” என்று அழைக்கப்படுவதற்கு பிரதான காரணமே அவர்கள் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்க மறுத்ததேயாகும். இந்த உம்மத்தில் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்காது விட்டால் வேறுயாரைத்தான் அழைப்பது? ஷீஆவின் உண்மையான கொள்கைகள் என்ன என்பதை அறியாத அப்பாவிமக்களும் படித்தவர்களும் ஊடகவியலாளர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஷீஆவின் தோற்றம்
நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி சுமார் 30 வருடங்களுக்கு பின் உருவானதுதான் இந்த ராபிளா எனும் ஷீஆ பிரிவாகும். சன்ஆ எனும் பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி முஸ்லிம்களுக்குள் ஊடுருறுவினான். பிறப்பின் அடிப்படையில் இவன் ஒரு யஹூதி. இவனால் தோற்று விக்கப்பட்ட பிரிவு தான் ஷீஆவாகும். அரசியல் லாபம் தேடி ஒற்றுமையாக ஒரே உம்மத்தாக உஸ்மான்(ரலி) அவர்களது தலையின் கீழ் ஒன்றுபட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை பிளவுப்படுத்தி கலவரத்தை உண்டுபண்ணி இரத்தத்தை ஓட்டி பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தியவனாவான். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அன்று உருவாக்கிய இரத்தக் களரி இன்றுவரை ஷீஆ சுன்னி என்று ஓடிக்கொண்டிருக்கிறது.
ஷீஆக்கள் (அலி) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவே அரசியல் பிரவேசம் செய்தனர். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு பின் அலி (ரலி) அவர்கள்தான கிலாபத் (இமாமியத்) பொறுப்புக்குரியவர். அதனை அபூபக்கர் உமர் தட்டிப்பறித்து விட்டனர். இவர்கள் அலி(ரலி)க்கு அநீதி இழைத்து விட்டு அலியிடம் மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டனர். எனவே அவர்கள் இருவரும் மீதும் அல்லாஹ்வினதும் மக்களினதும் சாபம் உண்டாகட்டும் என சபிக்கின்றனர் (நூல்.அல்காபி:8-245)
ஷீஆக்களின் இந்த பிரச்சாரத்திற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வில்லை. சஹாபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகிய யாருக்கு எதிராக குறைகூறி வசைப்பாடுகின்ற பணியை ஆரம்பித்து வைத்து பித்னாவை உண்டுபண்ணிய யூதனான அப்துல்லாஹ் இப்னு ஸபாவை அலி(ரலி) அவர்கள் பிடித்து மரணதண்டனை வழங்கியபோது அவனுக்காக சிலர் பரிந்து பேசிய போது மதாஇன் எனும் பகுதிக்கு நாடு கடத்தினார்கள்.
அலி(ரலி) மரணித்து விட்டார்கள் என கூறிய போது இல்லை இல்லை அலி மரணிக்கவில்லை. அவர் மரணித்து விட்டார் எனக் கூறி அவருடைய மூளையை கொண்டுவந்து 70 பேர் சாட்சி சொன்னாலும் ஏற்க மாட்டேன்.அவர் மேகத்தில் இருக்கிறார். இடி அவரது ஓசை. மின்னல்அவரது பார்வையாகும். என இந்தஅப்துல்லாஹ் இப்னு ஸபா கூறினான். ஷீஆக்களின் இக் கொள்கையை ஸபஈய்யா என அழைக்கப்படும்.
அலி(ரலி) அவர்களுக்கும் அபூபக்கர்ரலி) உமர் (ரலி) மற்றும் ஏனைய சஹாபாக்களுக்குமிடையில் சிநேகபூர்வமான நட்பும் நேசமும் இருந்ததே தவிர யூத ஷீஆக்கள் கூறுவது போல் பகைமை இருந்ததில்லை.
உமர் (ரலி) வபாத்தாகி அவர்களுடைய ஜனாஸாவை சுமப்பதற்கு தயாரான போது அவ்விடத்தில் அலி(ரலி)அவர்கள் கூறிய வார்த்தைகள் உள்ளத்தை உருகச்செய்கிறது. “உமரே!அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக. உமரே, உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் விரும்பி ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்களான (நபி(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர் (ரலி) ஆகிய இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் நானும் அபூபக்கர் உமரும் சென்றோம் என்றும் நானும் அபூபக்கரும் உமரும் புறப்பட்டோம் என்றும் சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கின்றேன். என்றார்கள். (நூல்:புகாரி 3685) அலி (ரலி) அவர்களின் இவ்வார்த்தைகளை ஷீஆக்கள் மறைத்து விட்டு அபாண்டங்களையே அள்ளி வீசுகிறார்கள்.
சஹாபாக்கள் மதம் மாறியவர்களாக சித்தரிக்கும் ஷீஆக்கள்
இந்த உம்மத்தின் அதி சிறந்த உத்தமர்களான சஹாபாக்களை நாம் மதிக்கிறோம். ஆனால் இலட்சக்கணக்கான சஹாபாக்களை குறைகூறியதுமட்டுமல்லாமல் அவர்களில் ஸல்மான் பாரிஸி (ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) அபூதர்கிபாரி (ரலி) ஆகிய மூவரைத்தவிர மற்ற அனைத்து சஹாபாக்களும் நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப்பின் மதம் மாறிவிட்டார்கள் (நூல்:ரிஜாலுல் கிஷ்ஷி பக்கம் 37. உசூலுல் காபி பாகம் 2. பக்கம் 243 பிஹாருல் அன்வார்.
ஆண்களில் நான்கு சிலைகளும் பெண்களில் நான்கு சிலைகளும் உள்ளன.அபூபக்கர் உமர் உஸ்மான் முஆவியாஆகியோர் ஆண் சிலைகளாவர். ஆயிஷா ஹப்ஸா ஹிந்து உம்முல்ஹகம் ஆகியோர் பெண் சிலைகளாவர். நிச்சயமாக இந்த பூமியின் மேல் அல்லாஹ்வின் படைப்புக்களில் இவர்களே மிகவும் மோசமானவர்கள். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஷீஆ) இமாம்களையும் நம்பக்கூடியவர் இவர்களை தங்களுடைய எதிரிகளாக நம்பாத வரை ஈமான் பூர்த்தியடையாது என்பது எங்களது (ஷீஆ) கொள்கைகளில் உள்ளதாகும்.(நூல்:ஹக்குல் யகீன் பக்கம்.519) ஆயிஷாவும் ஹப்ஸாவும் மோசமான நடத்தைக் கெட்ட பெண்களாவர் (நூல்: தப்ஸீருல் கும்மி பாகம்2.பக்கம்.377) நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுடன் இணைந்ததற்காக நபியின் அபம் நரகம் நுழையும் ;(நூல்:பஷ்புல் அஸ்ரார் பக்கம் 24 உமர்(ரலி) அவர்களை கொலை செய்த இறை நிராகரப்பாளரான மஜூஸி அபூலுஃலுஃ என்பவனை “இஸ்லாத்தின் வீரன்” என புகழுhரம் சூட்டுகின்றனர்.(நூல் :ஹக்துல்துரர் பீ பத்னி பக்ரி உமர் பக்கம்107
நீங்கள் ஸஹாபாக்கள் என கூறும் அவர்கள் நயவஞ்சகர்கள் முனாபிக்குகள். ஏன ஆயதுல்லாஹ் குமைனி கூறுகிறார்.(நூல்:உகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம் 69)
இஸ்லாத்தின் தூண்களாக நின்று சுவனத்து சொந்தங்களாக வாழ்ந்த சஹாக்களையும் நபிகளாரின் மனைவிமார்களையும் படுமோசமாக விமர்சிக்கின்றனர். நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் முஃமின்களின் தாய்மார்கள் என குர்ஆன் கூறுகிறது. (33:6) இதற்குமாற்றமான கருத்துக்கள் யூதனுடைய உள்ளத்தில் தோன்றுமே தவிர நல்லவர்களின் சிந்தனையில் ஒருபோதும் உதிக்காது.
சஹாபாக்களை காபிர்களாக்கிய பிறகு இஸ்லாத்தின் நம்பகத்தன்மை எங்கே நிற்கப்போகிறது.?யாரிடமிருந்து இஸ்லாத்தை ஏற்பது? எல்லாமே புஸ்வனமாகிவிடும். அல்குர்ஆன் அல்ஹதீஸ் அனைத்தும் போலியானதாக மாறிவிடும்.புதிதாக மார்க்கத்தை உருவாகிட வேண்டும். இந்த விஷமத்தனத்தைத்தான் இவர்கள் செய்தார்கள்.
புதிய மாரக்கம் -கலிமா
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை நாசப்படுத்தி விட்டு ஷீஆக்கள் புதிய கொள்கை பிரச்சாரத்தை உருவாக்கினர். இன்னுமொருவார்த்தையில் கூறினால் நபிகளார்(ஸல்) அவர்கள் போதித்த மார்க்கத்தின் அத்திவாரத்தையே பிடுங்கி எறிந்து விட்டு புதிய மார்க்க போதனைகளையும் அடிப்படைகளையும் தோற்றுவித்தனர்
இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜகாத் 5..ஹஜ்.இது தான் முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை இதனை அப்படியே மாற்றிவிட்டு இஸ்லாம் ஐந்து விடயங்ளின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1.தொழுகை 2.நோன்பு 3.ஜகாத் 4..ஹஜ் 5.விலாயத் அலி. (அலியின் தலைமைத்துவத்தை ஏற்பது) இந்த ஐந்தில் விலாயத்து அலியே மிகச் சிறந்தது என்கிறார்கள்.(நூல் அல்காபி)
கலிமாவுக்கு மாற்றமாக அலி(ரலி) அவ்களின் கிலாபத் (ஆட்சி) பொறுப்பே ஈமானின் முதல் அம்சம் என்று மாற்றியதன் மூலம் சஹாபாக்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களையும் காபிர்களாக்கிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள போதித்த கலிமாவை ஓரம்கட்டிவிட்டார்ககள்.
அல்குர்ஆனில் மாற்றம்:
உலக முஸ்லிம்களிடம் காணப்படும் குர்ஆனில் உண்மை இல்லை என்றும் அதில் சஹாபாக்கள் கூட்டல் குறைவுகள் செய்து திரிபுபடுத்தி விட்டனர் என்றும் 17ஆயிரம் வசனங்களை கொண்ட குர்ஆனை ஜிப்ரீல் நபியவர்களுக்கு இறக்கிவைத்தார்கள் (நூல் அல்காபி. பாகம்2 பக்கம்234) என்றும்ஷீஆக்கள் கூறுகின்றனர். “நம்மிடம் முஸ்ஹஃப் பாத்திமா என்ற குர்ஆன் இருக்கின்றது. அது உங்களின் குர்ஆனை விட மூன்று மடங்iகுயுடையது. அதில் உங்கள் குர்ஆனில் உள்ள ஒரு எழுத்துக்கூட இல்லை என்கிறார்கள் .(நூல்: அல்காபி பாகம்.2 பக்கம் 597)
முஸ்லிம்களுடைய குர்ஆனை விட வித்தியாசமான ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட குர்ஆனை வைத்துள்ளார்கள் என ஒப்குதல் வாக்குமூலம் தருகிறார்கள். அக் குர்ஆனுக்கான தப்ஸீர்களையும் இவர்களே எழுதிவைத்துள்ளனர். சஹாபாக்கள் குர்ஆனில் மோசடி செய்த பாவிகள் என்கிறார்கள்.
ஹதீஸ்களை நிராகரித்தல்:
நபி(ஸல்) அவர்கள் மூலமாக சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களையோ முஸ்லிம்உம்மத ஏற்றுக் கொண்டுள்ள சஹீஹூல் புகாரி முஸ்லிம் இப்னுமாஜா திர்மிதி அபூதாவுத் நஸாயீ முஅத்தா முஸ்னத் அஹ்மத் போனற் ஹதீஸ் நூற்களையோ அவைகளை எழுதிய இமாம்களையோ ஷீஆக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த உம்மத் ஏற்று மதிக்கின்ற இமாம்களான மாலிக்(ரஹ்) அபூஹனீபா ஷாபி(ரஹ்) அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)போன்ற எந்தவொரு இமாமையும் அங்கீகரிக்கமாட்டார்கள். இதற்கு மாற்றமாக ஷீஆவின் பரம்பரையில் வந்த பெரியார்களையே இமாம்களாகவும் அவர்கள் சொன்ன செய்திகளையே ஹதீஸ்களாகவும் ஏற்று பின்பற்றுவார்கள். முஸ்லிம்கள் மதிக்கின்ற அஹ்லுல்பைத்கள் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை மட்டும் எமது ஹதீஸ் நூற்களிலிருந்து எடுத்துக் காட்டி அலி(ரலி) பாதிமா (ரலி) ஹஸன்(ரலி) ஹூசைன் (ரலி) ஆகியோரை நாமும் மதிக்கிறோம் ஷீஆவும் சுன்னியும் ஒரே விடயத்தைத்தான் பேசிவருகிறோம் என மழுப்புவார்கள். ஆனால் அந்த ஹதீஸ்களை அறிவித்த சஹாபாக்களை “ரலியல்லாஹூ அன்ஹூ” என கூறவும்மாட்டார்கள்.நபிகளாரின் குடும்ப அங்கத்தினரை-மனைவிமார்களை- அஹ்லுல்பைத் களாக ஏற்கமாட்டார்கள்.
12 இமாம்களை நம்புதல்:
அலி(ரலி) அவர்களின் குடும்பத்தின் பரம்பரையில் வந்ததாக கூறப்படும்12 பேர்களை மட்டுமே இமாம்களாக மதிப்பர். இந்த இமாம்கள் பாவத்தை விட்டும் பரிசுத்தமானவரக்ள தவறு மறதியை விட்டும் அப்பாற்பட்டவர்கள். மறைவான ஞானம் பெற்றவர்ககள். இந்த உலகத்தில் நடந்துமுடிந்தவை நடந்து கொண்டிருப்பவை இனி நடக்க போகின்றவை பற்றிய ஞானம் உடையவர்கள். “ஒருவர் ஒரு திர்ஹத்தை கையில்வைத்து புறட்டுவது போல் இமாம் இப்பரபஞ்சத்தை புறட்டுகிறார்கள் என்றும் வாரத்தின் இருமுறை படைப்பினங்களின் அமல்களை மலக்குகள் இமாமிடத்தில் எடுத்துக் காட்டுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.
ஷீஆ புரட்சியின் சிற்பி என வர்ணிக்கப்படும் ஆயதுல்லாஹ் குமைனி இவ்வாறு கூறுகிறார்: “நமது இமாம்களுக்கு இருக்கும் அந்தஸ்து அல்லாஹ்வின் நெருக்கத்திற்குரிய மலக்கோ அல்லது அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிக்கோ கிடையாது என்பது நமது கொள்கையில் (ஷீஆ மத்ஹபில்) அவசியம் அறிந்திருக்க வேண்டியதாகும் (நூல்:ஹூகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம் 52.) மலக்குகள் மற்றும் நபிமார்கள் அடைந்து கொள்ளாத சிறப்புகளை ஷீஆஇமாம்களுக்கு உண்டு என்று கூறுவதன் மூலம் ஈமானை பால்படுத்துகின்ற கொள்கையுடையவர்கள் என்பது மிகவும் தெளிவானது.அல்லாஹ்விடத்தில் அமல்களை காண்பிப்பதை விட இமாம்களிடத்தில் காண்பிக்கப்படுகிறது என்றால் அல்லாஹ்வுக்கு எந்த வேளையுமில்லை. மதிப்பும் இல்லை என்கிறார்கள்.
மேலும் குமைனி கூறுவதை கேளுங்கள்: “நபிமார்கள் அனைவரும் நீதியை நிலைநாட்டுவதற்காகவே வந்தனர். ஆனால் அதில் அவர்கள் வெற்றிப் பெறவில்லை.(தோழ்வி கண்டனர்.) மனித குலத்தை சீர்திருத்த வந்த இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூட தோல்வியைத்தான் சந்தித்தார்கள்”
எல்லா நபிமார்கள் தோழ்விஅடைந்து விட்டார்கள் இஸ்லாத்தை நிலை நாட்டி எத்திவைப்பதில் நபி(ஸல்) அவர்களும் தோழ்வி அடைந்து விட்டார்கள் என்றால் இந்த இஸ்லாம் பூரணத்துவமற்ற நீதியை நிலை நாட்டதவறிய மார்க்கம் அல்லாஹ் இம்மார்க்கத்தை குறைவுள்ளதாக ஆக்கியுள்ளான் என சாடுகிறார் குமைனி;. இவர்கள் உருவாக்கிய மார்க்கத்தை பார்த்தீர்களா? இப்போது சொல்லுங்கள் இவர் ஈரானில் ஏற்படுத்தியது இஸ்லாமிய புரட்சியா? ஷீஆ புரட்சியா? இவரையா “இமாம்” என்று அழைப்பது?
இமாம்களின் மறு பிறப்பு:
இந்த உலகத்தில் மரணிக்கின்ற எவரும் திரும்பி வரபோவதில்லை என்பது தான் இஸ்லாத்தின் கொள்கையாகும். ஆனால் ஷீஆக்கள் மரணித்துப் போன தங்களுடைய இமாம்கள் திரும்பி வந்து நீதியை நிலை நாட்டுவார்கள் என கூறி “மறு பிறப்பு” சிந்தனையை தோற்றுவித்தனர். அவர்களது 12வது இமாமாக கருதும் அல்மஹ்தி எனப்படும் முஹம்மத் இப்னு ஹஸன் அல்அஸ்கரி என்பவர் ஹிஜ்ரி 256-ல் பிறந்து ஐந்தாம் வயதில் ஒரு குகையில் மறைந்து விட்டார். இவர் திரும்பி வந்து நீதியை நாட்டுவதுடன் அபூபக்ர் (ரலி) உமர்(ரலி) ஆயிஷா (ரலி) ஆகியோரை எழுப்பி தண்டிப்பதுடன் மேலும் பலசஹாபாக்களுக்கெதிராக பழி தீர்ப்பார்கள் என் கூறுகிறார்கள்.(நூல்:இய்காலு மினல் ஹஜ்இதி)
ஷீஆக்களில் முப்தி ஒருவர் பேசும் போது “நாங்களும் (சுன்னிகளாகிய) நீங்களும்; ஒரே உம்மத்தாக இருக்கிறோம். இது எதுவரை என்றால் (எதிர்பாரக்கப்படும் மஹ்தியான ஹஸன் இப்னு ஹஸ்கரி) இமாம் வரும் வரையாகும். அவர் வாளுடன் வந்து விட்டால் நீங்கள் ஒரு சமூகமாவும் நாங்கள் வேறொரு சமூகமாகவும் ஆகிவிடுவோம் எனறார் (ஆதாரம்:. அல்புர்ஆன் . தொலைக்காட்சி நிகழ்ச்சி)
வெளிப்படையில் ஒற்றுமையைப்பற்றி கோஷம் எழுப்புகின்றவர் உள்ளுக்குள் எந்தளவு குரோதத்துடனும் வைராக்கியத்துடனும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
அல்லாஹ் அறிவுடையவன் அல்ல. அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்த ஞானமுள்ளவன் என்பது முஸ்லிம்களாகிய எங்களது விசுவாசமாகும். ஆனால் ஷீஆவின நம்பிக்கை அதற்கு மாற்றமானது. “உலகில் நடைப்பெறுகின்ற எந்தவொரு நிகழ்வும் நடைப்பெற்ற பின்புதான் அல்லாஹ்வுக்கு தெரியவரும். அதற்கு முன்பு அவனுக்கு தெரியாது இதனை “அல்பதா” என அழைக்கப்படும் என கூறுகின்றனர். “மதுபானம் அருந்துதல் ஹறாம் என்றும் அல்லாஹ்வுக்கு “பதா” ஏற்படுதல் நிச்சயம் உண்டு என்றும் சொல்லாத எந்த நபியையும் அல்லாஹ் அனுப்பவில்லை. (நூல்:அல்காபி பாகம் 1 பக்கம்148)
அதாவது அல்லாஹ் அனைத்தும் அறிந்த ஞானமுள்ளவன் அல்ல என்று அறிவிப்பதற்கு நபிமார்களை அனுப்பிவைத்தானாம். நஊது பில்லாஹ்!
முத்ஆ (விபச்சாரம்):
ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலம் வாடகைக்கு அமர்த்தி இன்பம் அனுபவிப்பதை முத்ஆ எனப்படும். இந்த முத்ஆவை நபி(ஸல்)அவர்கள் கைபர் யுத்தத்தின் போது அல்லது பத்ஹூ மக்காவின்போது தடைசெய்தார்கள்.(நூல் முஸ்லிம்)
ஆனால் ஷீஆக்கள் முத்ஆ (விபச்சாரத்தை) வாழ்கையில் ஒரு முறையேனும் செய்யவேண்டும் என ஊக்குவிக்கிறார்கள். முத்ஆ செய்யாமல் மரணிப்பவன் மறுமையில் ஊன முற்றவனாக பிறப்பான் என்றும் முத்ஆ செயதவன் குளிக்கும் போது அவனுடைய உடலிலிருந்து சொட்டுகின்ற ஒவ்வொரு நீர் துளிக்கும் 70 மலக்குகள பாவமன்னிப்புக் கோருவதுடன் முத்ஆசெய்யாதவனுக்கு மறுமைநாள் வரை சபிக்கின்றனர் என்கின்றனர். (நூல்:முன்தஹல்ஆமால்:2-341) விபச்சாரத்தை கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. ஹராமான பிறப்பில் குழந்தைகளை உற்பத்திசெய்வதில் எத்துனை அக்கறை இவர்களுக்கு!
தனிமனித வழிபாடு:
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள தனிமனித வாழிபாடு மற்றும் கப்ருவணக்கத்தை ஷீஆக்கள் ஆகுமாக்கினர். குமைனியுடைய கப்ரை புனித கஃபதுல்லாஹ் போன்று கட்டி புனிதப்படுத்தி வணங்குவதும் கர்பலா எனும்பகுதியில் ஹூசைன்(ரலி) அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மண்ணை புனிதமாகக் கருதி அந்த மண்ணால் செய்யப்பட்ட உருண்டையின் மீது சுஜூது செய்தும் வழிபடுவர். ஆஷூராவுடைய தினத்தை துக்கதினமாக பிரகடனப்படுத்தி அன்றைய நாளில் கர்பலாவில் ஒன்றுதிரள்வதை ஹஜ் செய்வதை விட உயர்ந்த கிரிகையாக கூறுவர்.
“யார் ஹூசைன் (ரலி)யின் கப்றை தரிசிக்கிறாரோ அவருக்கு 20 ஹஜ் உம்ரா செய்வதை விட சிறப்பானதாகும்.(நூல்: நூருல் ஐன் பக்கம் 253)
அந்த நாளில் சஹாபாக்களை திட்டி சபிப்பதுடன் கூரிய ஆயுதங்களாலும் சவக்கையினாலும் தங்களை அடித்து கீறிக் கிழித்துக் கொண்டு இரத்தத்தை ஓட்டி காட்டுமிராண்டித்தனமாக நடப்பர்.
தக்யா:
ஷீஆவின் மதகொள்கைகளை சுன்னி முஸ்லிம்களிடமோ ஏனையவர்களிடமோ வெளிக்காட்டாது வெளிப்படையில் தங்களையும் முஸ்லிம்களாக காட்டிக் கொண்டு நடிப்பதற்கே தக்யா எனப்படும். இதனை ஒவ்வொரு ஷீஆவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். “தக்யா இல்லாதவனுக்கு (ஷீஆ) மாரக்கம் இல்லை. (நூல்: உசூலுல் காபி 2-220.) இது தெளிவான நயவஞ்சக்தை தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த நயவஞ்சகத்துடன் தான் அன்றும இன்றும் முஸ்லிம்களுக்குள் ஊடுறுவி ஈமானை நாசப்படுத்தி கூறுபோடுகிறார்கள்.
1980-ம் ஆண்டுகளில் (ஈரானிய புரட்சிக்குப்பின்) இலங்கை நாட்டில் ஷீஆவை ஜஃபர் சாதிக் என்ற பெயரில் 5-வது மத்ஹபாக அங்கீகரிக்க வேண்டுமென கோரியபோது அதனை அன்றிருந்த உலமாக்கள் மனதுணிவுடன் பலமாக கண்டித்ததுடன் ஷீஆவின் சீர்கேடுகளை விளக்கப்படுத்தி துண்டுபிரசுரங்கள் மற்றும் நூற்கள் வெளியிட்டனர். மர்ஹூம் றுஹூல் ஹக் மவ்லவி அவர்கள் ஷீஆவும் சுன்னாவும் எனும் நூலை மொழிப்பெயர்த்து இலங்கை வாழ்முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடியதாக செய்தார்கள். இந்நூலில் ஷீஆவின் விபரீதங்கள் மற்றும் சீர்கேடுகள் மிகவும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன. இந்நூலை பாகிஸ்தனை சேர்ந்த மர்ஹூம் இஹ்ஸான் இலாஹி அவர்கள் அரபியில் எழுதிய போது ஷீஆக்கள் அவரை அணுகி வாபஸ் பெறுமாறு கோரினர். அவர்மறுத்து விடவே குண்டு வைத்து கொன்றனர். இந்த நாட்டில் ஷீஆக்களுக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் ரீதியான நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு பொதுபணிகள் ஊடாக முஸ்லிம்களை அணுகுகின்றனர். வீடமைப்புத்திட்டம் வழங்குதல் மீலாத்விழாக்களில் பங்குபற்றுதல் ஈரானுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் ஹஜ் உம்ரா கருத்தரங்குகளை நடாத்துதல் மத்ரஸாக்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு உதவி புரிதல் சஞ்சிகைகள் வெளியிடுதல் போன்ற காரியங்களை செய்து முஸ்லிம்களின் நம்பிக்கைகளை பெற முயல்கின்றனர்.
ஷீஆவின் ஆபாயத்தையும் ஈமானுக்குவேட்வைக்கும் கொள்கையைப்பற்றியும் மக்கள் முன் வைக்கும் போது அதிலிருந்து திசைதிருப்பும் முகமாக ஷீஆ சுன்னி பற்றி பேசுகின்ற நேரமா இது. முஸ்லிம்களுக்கெதிராக எதிரிகள் ஒன்றுதிரளும் போது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் என கோஷம் எழுப்புவார்கள். இஸ்லாம் இருக்கும் வரை இஸ்லாத்தின் எதிரிகள் இருக்கவே செய்வர். அதனை முறியடிக்க தூய்மையான ஈமான்தாரிகளும் தயாராகவே இருப்பர். எங்கள் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களையும் அவர்களது அருமைத் தோழர்களையும் மனைவிமார்களையும் துச்சமாக மதித்து கொச்சைப்படுத்துகின்றவர்களுடன் இஸ்லாத்தை பணயம் வைத்து கைகுலுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. வெளிப்படையான எதிரிகளை விட உள்ளே இருந்து குறிபறிக்கும் இந்த எதிரிகளே எப்போதும் ஆபத்தானவர்கள்.
கடைசியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்லி முப்தி அவர்கள் “ஷீஆயிஸம் அதன் கொள்கைகளும் உட்பிரிவுகளும்” எனும் நூலுக்கு வழங்கிய அணிந்துறையில் ஷீஆ பற்றி குறிப்பிட்டதை முன்வைக்கிறேன்.: ஷீஆ-அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூத அறிஞனால் உருவானது. அவன் முஸ்லிம் சமூகத்தை பிரித்தாள சதி செய்தான் என்றும், இஸ்லாத்திற்கு முரண்பட்ட பல கோட்பாடுகளை கொண்டு ஷீஆக்கள் இயங்கி வருகிறனர் அவர்கள் எங்களிடம் உள்ள குர்ஆனை நிராகரித்து வேறொரு குர்ஆனை வைத்துக் கொண்டு அதுதான் உண்மையானது என வாதிடுவது ஸஹாபாக்களை தூற்றி வசைப்பாடுவதும் அடங்குகிறது. எனவே இத்தகைய வழிகெட்ட கொள்கைகளைக் பற்றி பலரும் கிதாபுகளை எழுதி உம்மத்தை அந்த வழிகேட்டிலிருந்து பாதுகாக்கின்றார்கள் என்றும் எழுதியுள்ளார்கள். அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக!
அன்புக்குரிய முஸ்லிம்களே!
சொல்லிவைப்பது எமது கடமை. புரிந்து கொள்வது உங்கள் கடமை